டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையே காரசார வாக்குவாதம்! நடந்தது என்ன?
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!
சென்னை: நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 5.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,965 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன.
இதையும் படிக்க |2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சனிக்கிழமை (மார்ச். 1) காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 5.50 உயர்த்தப்பட்டு ரூ.1,965 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (மார்ச். 1) அமலுக்கு வருகிறது.
வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை
எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.