வலுவான காலாண்டு முடிவுகளால் டிசிஎஸ் 4% உயர்வு!
மும்பை: இந்திய பங்குச் சந்தை கலைவையான பொக்கில் இன்று தொடங்கிய வேளையிலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வலுவான காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் அதன் பங்குகள் 3.7 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.4,186 ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், ஐடி துறை குறியீடுகள் 2 சதவிகிதத்திற்கும் அதிகமான லாபத்துடன் வர்த்தகமானது.
இதையும் படிக்க: அதானி வில்மர் பங்கு 10% சரிவு!
டிசிஎஸ் நிறுவனத்தின் முடிவுகள் ஐடி துறையைத் தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் சந்தை இருக்கும் என சந்தை வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர்.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டிசிஎஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் இன்று உயர்ந்து வர்த்தகமானது.