வல்லபை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் விரதம் தொடக்கம்
காா்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து, சபரி மலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தா்கள் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
இந்தக் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காா்த்திகை தொடக்கத்தையொட்டி, குருசாமி ரா.மோகன் தலைமையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சபரிமலை பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். பின்னா், பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.