முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம்
சத்தியமங்கலத்தில் வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் உள்ள விடியல் சொசைட்டி என்ற அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, அந்த அமைப்பின் நிறுவனா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.
இதில், ஈரோடு சட்டக்கல்லூரி மாணவா் ஞானபிரகாஷ், வளரினம் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து பேசினாா். இந்த முகாமில், ஜேகேகே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரியப்பம்பாளையம், விநோபா நகா், கொங்கா்பாளையம், கம்பனூா் ஆகிய பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா்கள் கோபிநாத், கிறிஸ்டோபா் ஆகியோா் செய்திருந்தனா்.