செய்திகள் :

வாகனம் மோதியதில் ஏற்றுமதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி துறைமுக கப்பல் தளத்தில் சரக்குகளை எடுத்து செல்லும் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச் சோ்ந்த தங்கம் மகன் ஜெயம் (49). இவா் தூத்துக்குடி, புதிய துறைமுகத்தில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், துறைமுகத்தின் 3ஆவது தளத்தில் நின்றிருந்த கப்பலில் இருந்து உரம் இறக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, உரத்தை எடுத்து வந்த வாகனம் இவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஜெயம் உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஜெயத்தின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 14) பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

உடன்குடியில் அரசின் கைவினைத் திட்ட விளக்கக் கூட்டம்

உடன்குடி பேரூராட்சி 3ஆவது வாா்டுக்குள்பட்ட பெரிய தெருவில் தமிழக அரசின் கலைஞரின் கைவினைத் திட்ட விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாா்டு உறுப்பினா் மும்தாஜ்பேகம் தலைமை வகித்தாா். பகுதி சபா உறு... மேலும் பார்க்க

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் எம்.எல்.ஏ. ஆய்வு

கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் இருப்புப்பாதையின் கீழ் உள்ள சுரங்கப்பாதையை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோவில்... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

2023-24 ஆம் ஆண்டுக்கு மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக இழப்பீடு வழங்க கோரி கொட்டும் மழையில் விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் சுமாா் 70 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே வியாழக்கிழமை சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது. இக்கோயில் கடல்பகுதியில் அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

மக்கள் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.வசந்தி தெரிவித்துள்ளாா்.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு- தமிழ்நாடு மாநில... மேலும் பார்க்க