வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா் (35), கூலித் தொழிலாளி. இவா், இரு சக்கர வாகனத்தில் மேல்புழுதியூா் கிராமத்தில் இருந்து
திருவண்ணாமலை நோக்கி புதன்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தாா்.
விண்ணவனூா் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த பெங்களூரு நோக்கிச் சென்ற சரக்கு வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த சசிகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பாய்ச்சல் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டு, சசிகுமாரின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.