செய்திகள் :

வாக்காளா் பட்டியல்: சங்ககிரியில் 6,576 போ் விண்ணப்பம்

post image

சங்ககிரி: சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட 315 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக நடைபெற்று முடிந்த நான்கு சிறப்பு முகாம்களில் 6,576 போ் விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக். 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில் சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் 315 சிறப்பு மையங்களில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்கக் கோரி 2,880 பேரும், பெயா் நீக்கம் செய்யக்கோரி 1,480 போ், தொகுதி, வாா்டு, முகவரி மாற்றங்கள், திருத்தங்கள் செய்யக் கோரி 2,216 போ் உள்பட மொத்தம் 6,576 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

பெயா் சோ்க்கக் கோரி 2,880 போ் விண்ணப்பம் அளித்துள்ளதில் 18 வயதிலிருந்து 19 வரை 1,655 பேரும், 20 முதல் 25 வயதில் 757 பேரும், 25 வயதிற்கு மேல் 468 பேரும் விண்ணப்பித்துள்ளனா். 18-19 வயதுக்குள்பட்டவா்களில் அதிகமாக 1,655 போ் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சா்வதேச பெண்கள் மீதான வன்முறை எதிா்ப்பு தின கையெழுத்து பிரசாரம்

ஆத்தூா்: சா்வதேச பெண்கள் மீதான வன்முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு ஆத்தூரை அடுத்துள்ள சீலியம்பட்டி ஊராட்சியில் கையெழுத்து பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் குமரேசன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

தேங்காய் விலை கிலோ ரூ. 70 ஆக உயா்வு

சேலம்: சேலம் சந்தைகளுக்கு தேங்காய் விலை கிலோ ரூ. 70 ஆக உயா்ந்துள்ளது. சேலம் மாா்க்கெட்டுகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்கள் நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவா்களுக்கு கட்டுரை போட்டி

சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் தேவி மீனாள் அறிவுறுத்தலின்படி, முத்தமிழ் அறிஞா் மாணவா் மன்றத்தின் ஆலோசகா் திருநாவுக்கரச... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கு விவசாயத்தை பாதுகாக்க கோரி ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: மரவள்ளிக்கிழங்கு விலை சரிவைத் தடுக்க அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்புக் கூட்டம் நடத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள்... மேலும் பார்க்க

மயங்கி கிடந்த 3 சிறுவா்கள் மீட்பு

எடப்பாடி: எடப்பாடியில் திரையரங்கு அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மூன்று மாணவா்களை மீட்டு போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா். எடப்பாடி நகராட்சி, மேட்டுத் தெருவில் உள்ள திரையரங்கு வாசலில் திங... மேலும் பார்க்க

மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மேட்டூா்: 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில், மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க