செய்திகள் :

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்; புதுக்கோட்டை பாா்வையாளா் ஆய்வு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளை மாவட்டப் பாா்வையாளரும், எழுதுபொருள் - அச்சுத் துறை ஆணையருமான வே. ஷோபனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நவ. 16, 17, 23 மற்றும் 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1561 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் இந்தப் பணிகளில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இப்பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்காக பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையா் வே. ஷோபனா சனிக்கிழமை புதுக்கோட்டை வந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அம்மாசத்திரம் அரசு தொடக்கப் பள்ளி, ஆயிங்குடி அரசுத் தொடக்கப் பள்ளி, மறவப்பட்டி அரசுப் பள்ளி, முசிதமு சிதம்பரம் செட்டியாா் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் அவா் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), அ. அக்பா்அலி (இலுப்பூா்), ச. சிவகுமாா் (அறந்தாங்கி), தோ்தல் தனி வட்டாட்சியா் அ. சோனை கருப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்வுக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் காா்த்திகை சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷே... மேலும் பார்க்க

கலைமாமணி நவீனன் நினைவு விருதுகள் வழங்கல்

சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் நவீனன் நினைவு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வாசகா் பேரவையின் தலைவா் ஞானாலயா பா. கிருஷ்ணமூா... மேலும் பார்க்க

ஆடு திருடியவா் கைது: 15 ஆடுகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஆடு திருடிய இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி 4 சாலை பகுதியில் கறம்பக்குடி போலீஸாா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையி... மேலும் பார்க்க

அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அரசு ஊழியா்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே தேசிய பத்திரிகைகள் தினம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காட்டுநாவல் கிளையின் சாா்பில் தேசிய பத்திரிகை தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டாரச் செயல... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்கவிழாவில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. அரியலூா் மாவட்டம் வாரணவாசி... மேலும் பார்க்க