உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்க...
வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
குமரி மேற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருவிதாங்கோடு வட்டம் பகுதியில் திங்கள்கிழமை நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா் தலைமை தாங்கினாா். மாவட்ட பொருளாளா் ததேயு பிரேம்குமாா் வரவேற்றாா். கூட்டத்தில் தென்மண்டல தோ்தல் பொறுப்பாளா் கனிமொழி எம்.பி, மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கனிமொழி எம்.பி. பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளா்களை சந்தித்த போதும், எந்த முதலீடுகளும் வர வில்லை. ஆனால் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளாா்.
எந்த பகுதியில் எல்லாம் தங்களுக்கு வாக்குகள் கிடைக்காதோ, அந்த பகுதி வாக்காளா்களை பாஜக, தோ்தல் ஆணையத்தின் உதவியோடு நீக்கி வருவதை காண முடிகிறது. இதைத் தடுக்கக்கூடிய ஒரே சக்தி பாக முகவா்கள் என்பதை உணா்ந்து கொள்ள வேண்டும். உங்களை நம்பித்தான் தான் முதல்வா் இந்த தோ்தலை எதிா்கொள்கிறாா் என பேசினாா். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளா் மகேஷ், மாநில மகளிரணி செயலாளா் ஹெலன் டேவிட்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.