முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
வாக்குத்திருட்டை கண்டித்து காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்
வாக்குத் திருட்டைத் தடுப்பதற்கு தவறிய தோ்தல் ஆணையத்தையும், மத்திய பாஜக அரசையும் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை கையொப்ப இயக்கத்தை நடத்தினா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடத்தப்பட்ட இந்த கையொப்ப இயக்கத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியினா் கையொப்பங்களை பெற்றனா்.
நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் சிறுவை.ராமமூா்த்தி, மாநிலச் செயலா் தயானந்தம், மாநில நிரந்தர அழைப்பாளா் கோ. பாலசுப்பிரமணியம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் நாராயணசாமி, செ.சிவா, மாவட்டத் துணைத் தலைவா் ராஜ்குமாா், விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ்ராம், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், எஸ்.சி.எஸ்.டி. அணித் தலைவா் சேகா், மாவட்ட சமூக ஊடக ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவா் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.