ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமைத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
விழாவின்போது தமிழ் மீதான பெரியாரின் போராட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து பேசினார்.
மேலும், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஜனவரி 17 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 7-ஆவது முறையாக திமுக ஆட்சியமைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிக்க:14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரை காவல் அதிகாரி கைது!