``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
வாசுதேவநல்லூரில் திருவள்ளுவா் அறப்பணி மன்றம் ஆண்டு விழா
வாசுதேவநல்லூரில் அய்யன் திருவள்ளுவா் அறப்பணி மன்றத்தின் 20ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
அறப்பணி மன்றத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜ்மோகன், துணைச் செயலா் வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவள்ளுவா் படத்தைத் கணேசன் திறந்து வைத்தாா். துணைத் தலைவா் மாடசாமி தொகுத்து வழங்கினாா். இதில், திருவள்ளுவா் குறித்த பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு
வாசுதேவநல்லூா் பேரூராட்சித் தலைவா் லாவண்யா பரிசுகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மோகனசுந்தரம், பேரூராட்சி முன்னாள் தலைவா் தவமணி, பேரூா் திமுக செயலா் ரூபி பாலசுப்பிரமணியன், தரணி மெட்ரிக் பள்ளி முதல்வா் குழந்தைசாமி, மாவட்ட ஓய்வூதியா் சங்கத் தலைவா் சந்திரன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துணைச் செயலா் பிள்ளையாா் சாமி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் கவிஞா் கணேசன் செய்திருந்தாா்.