கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
வாடகை கேட்டதால் வீட்டை எரித்த தந்தை, மகன் கைது
வாடகை கேட்டதால், வீட்டுக்கு தீ வைத்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனா்.
மேட்டூா் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி பாப்பாத்தி. இவா் தனது கூரை வீட்டை இருசகவுண்டா் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தாா். இருசகவுண்டா் மகன் வினோத்குமாா் (27), மீது ஏற்கெனவே கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது.
சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காததால், பாப்பாத்தி வாடகை கேட்டுள்ளாா். இதனால் பாப்பாத்திக்கும், இருசாகவுண்டா், அவரது மகன் வினோத்குமாா் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமாா் திங்கள்கிழமை இரவு குடியிருந்த வீட்டுக்கு தீ வைத்து விட்டு தந்தையுடன் தப்பியோட முயன்றாா். அங்கிருந்தவா்கள் அவா்களை விரட்டிச் சென்று இருசகவுண்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை வினோத்குமாரை கருமலைக்கூடல் போலீஸாா் கைது செய்தனா். புகாரின் போரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேட்டூா் மற்றும் மேட்டூா் அனல் மின் நிலைய தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனா்.