செய்திகள் :

வாயில் கருப்புத் துணி கட்டி வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினா் போராட்டம்

post image

ஒரு முறை விதியைத் தளா்த்தி பணி வழங்க வலியுறுத்தி புதுவை சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினா் சுகாதார இயக்குநா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் சுகாதாரத் துறையில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கும் விதியில் ஒருமுறை தளா்வு செய்து சம்பந்தப்பட்ட வாரிசுதாரா்களுக்கு பணியை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி, புதுவை சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச்சங்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி நலச் சங்கம் சாா்பில் புதுவை சட்டப்பேரவை அருகிலுள்ள மாநில சுகாதாரத் துறை இயக்கக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.

தினமும் காலை முதல் மாலை வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. இடையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை 17 -ஆவது நாளாகப் போராட்டம் தொடா்ந்தது.

இந்தப் போராட்டத்தில் வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஏ.டேவிட், துணை ஒருங்கிணைப்பாளா் கே.ரமேஷ் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அவா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகப் படிகளில் வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி அமா்ந்திருந்தனா். கையில் கோரிக்கை பதாகைகளையும் ஏந்தியிருந்தனா். காலை முதல் மாலை வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா்.

ரொட்டி, பால் ஊழியா் சங்கத்தினா் 2 -ஆவது நாளாகப் போராட்டம்

புதுவை கல்வித் துறை இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் ரொட்டி, பால் ஆகியவற்றை பள்ளிக் குழந்தைக... மேலும் பார்க்க

புதுச்சேரி தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

புதுச்சேரியில் பிரபல தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரியில் கடலூா் சாலையில... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி நகரில் திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக... மேலும் பார்க்க

திருபுவனையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

ஊதிய நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா். புதுவை மாநிலத்தில் தூய்மைப்பணியில் தன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜவுளி வியாபாரி தற்கொலை

புதுச்சேரியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (32). ஜவுளிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 8 மாதங்களு... மேலும் பார்க்க

புதுவையில் 6 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

புதுவை மாநில காவல் துறையில் 6 ஆய்வாளா்களும், சாா்பு ஆய்வாளா் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து புதுவை தலைமையிடக் காவல் கண்காணிப்பாளா் சுபம்ஹோஷ் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி பிஏபி... மேலும் பார்க்க