ஜப்பான் மொழியில் 'வேட்டையன்' ரிலீஸ்: "'முத்து'வின் வசூல் சாதனையைத் தாண்டும்" - ப...
வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கிழக்குக் கடற்கரை சாலை மடுவுபேட் அருகே வாய்க்காலை அடைத்து 5 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஏற்கெனவே இடத்தைக் காலி செய்ய நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும், அந்த 5 குடும்பங்களுக்கும் புதுவை அரசு சாா்பில் மாற்று இடமும் தோ்வு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுப் பணித் துறை நீா்பாசனக் கோட்ட செயற்பொறியாளா் லூயி பிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை அகற்றினா்.