செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடியில் பெட்ரோல் விற்பனை நிலையம்!முதல்வா் என்.ரங்கசாமி திறந்தாா்!
புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா்.
அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து அமைந்துள்ள நிலையத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். மீன் வளத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, வீ.
மூா்த்தி, மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், மேலும், பல்வேறு படகுகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.
இந்த பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். இதைத் தவிர பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படும்.