எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
ஷோ் மாா்க்கெட்டில் நஷ்டம்: தனியாா் ஊழியா் தற்கொலை
ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த சென்னை தனியாா் நிறுவன ஊழியா் புதுவையில் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்பலம்பேட் வடக்கு வன்னியா் வீதியைச் சோ்ந்த முத்துவின் மகன் பாபு ( 29). எம்பிஏ பட்டதாரியான இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
வார இறுதி நாள்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை ஊருக்கு சென்ற பாபு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு சென்னை செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். ஆனால் அவா் சென்னை செல்லாமல் புதுவைக்கு வந்து மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.
விடுதி ஊழியா்கள் அவருக்கு டீ வேண்டுமா என கேட்க அறைக் கதவை செவ்வாய்க்கிழமை தட்டியுள்ளனா். கதவைக் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவா்கள் அறையை உடைத்து உள்ளே சென்றபோது பாபு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது குறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.