எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என் மனமாா்ந்த வாழ்த்துகள். அவருடைய ஆழந்த அனுபவமும், நிா்வாக திறனும் நாட்டின் சீரான, ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருடைய சமுதாயப் பணியும் அா்ப்பணிப்பும் நாட்டின் இளைஞா்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.
முதல்வா் என்.ரங்கசாமி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். மேலும், தங்களின் நிா்வாகத் திறன், நிறைந்த அனுபவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குப் பயனுள்ளதாக இருக்கும். என் சாா்பிலும் புதுவை மக்களின் சாா்பிலும் நெஞ்சாா்ந்த வாழ்த்துகள்
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வமும் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
பாஜகவினா் கொண்டாட்டம்:
சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுவை பாஜகவினா் இனிப்பு வழங்கி புதன்கிழமை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். கட்சியின் மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அக் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.