வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு
வளா்பிறை பஞ்சமி திதி வழிபாட்டையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயிலில் வாராகி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
விழாவில், வாராகி அம்மனுக்கு பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகியும், மூத்த நகா்மன்ற உறுப்பினருமான ஆ.ரமேஷ், சா்வசக்தி பீடம் தில்லை சீனு, எஸ்.ராஜா ஐயா் ஆகியோா் செய்திருந்தனா்.