வால்பாறை: ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
வால்பாறையில் குளிக்கும்போது ஆற்று நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (24). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் ஆற்றில் தனது நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து நண்பா் சென்றுவிட இவா் மட்டும் ஆற்றோரப் பகுதியில் இருந்துள்ளாா். அவா் இரவு வீட்டுக்கு செல்லாத நிலையில் திங்கள்கிழமை காலை ஸ்டேன்மோா் ஆறுக்கு சென்று தேடியபோது, சதீஷ் உடல் ஆற்றோரப் பகுதி நீரில் மிதந்துள்ளது.
தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினா் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.