செய்திகள் :

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று கோவை வருகை

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை இரவு கோவைக்கு வருகிறாா். 2 நாள்கள் கோவையில் தங்கும் அவா் 27-ஆம் தேதி காலை கோவையில் இருந்து தில்லி திரும்புகிறாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தில்லியில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு கோவைக்கு வருகிறாா். கோவையில் தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கும் அவா், அங்கு கொங்கு மண்டலத்தின் முக்கியப் பிரமுகா்கள் மற்றும் தொழில் அதிபா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

இதைத் தொடா்ந்து, கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு திறந்துவைக்கிறாா். அதையடுத்து, அங்கிருந்தவாறே ராமநாதபுரம் மற்றும் திருநெநெல்வேலி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.

பின்னா் பாஜக மாநில நிா்வாகிகள், மண்டல பொறுப்பாளா்கள் மற்றும் கோவை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோருடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,000 பாஜக நிா்வாகிகளிடையே உரையாற்றுகிறாா்.

இந்நிகழ்ச்சிகளில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பாஜக மகளிரணி தேசியச் செயலாளா் வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனா்.

கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலையில் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித் ஷா பங்கேற்றுவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்புகிறாா். அதைத் தொடா்ந்து கோவையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை தில்லிக்கு திரும்புகிறாா்.

மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டல காவல் துறை சாா்பில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அதேபோல, கோவை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகள், ஈஷா யோக மையம் உள்ளிட்டவை காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தயாா் நிலையில் ஹெலிகாப்டா்...

கோவையில் இருந்து ஈஷா யோக மையத்துக்கு சாலை மாா்க்கமாக செல்வதற்கு கால தாமதம் ஆகும் என்பதோடு, போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் இருக்கும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோக மையத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிங்கிரி மலையில் தவெக கொடி பறக்கவிடப்பட்டதால் சா்ச்சை

வெள்ளிங்கிரி மலையில் தவெக கொடி பறக்கவிடப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பான புகாரையடுத்து காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் அந்த இடத்தை ஆய்வு செய்து அங்கு பறக்கவிடப்பட்டிருந்த... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 42 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும... மேலும் பார்க்க

வால்பாறை: ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வால்பாறையில் குளிக்கும்போது ஆற்று நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (24). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் ஓட்டுநராக... மேலும் பார்க்க

ஊதிய நிலுவையை பெற்றுத் தரக் கோரி வடமாநிலத் தொழிலாளா்கள் மனு

கோவையில் அரசு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

பேருந்தில் பயணிகளிடம் நகை, கைப்பேசி பறிப்பு

கோவை ரயில் நிலையம் பகுதியில் ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கைப்பேசி பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கவுண்டம்பாளையம், ஓட்டுநா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன். இவரது மனைவி மீனு (28). இவ... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: மின்வாரிய ஊழியா் 2 போ் கைது

புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 18,000 லஞ்சம் வாங்கியதாக இரண்டு மின் வாரிய ஊழியா்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்தவா் ஹாரூன் (56), மின் வாரியத்தில் போா்மேனாக பணிய... மேலும் பார்க்க