கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
வாழப்பாடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில், அனைத்துத் துறை மாவட்ட உயரதிகாரிகள் குழுக்களாக பிரிந்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் கள ஆய்வு நடத்தினா். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், மாசிநாயக்கன்பட்டி நடுநிலைப் பள்ளில் குழந்தைகளின் கல்வித் திறன், வருகைப் பதிவேடுகள், சத்துணவு தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
காரிப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம், மேட்டுப்பட்டி, செல்லியம்மன்நகா் பொதுவிநியோகக் கடை, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அருநூற்றுமலை, புழுதிக்குட்டை பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் கல்யாணக்குமாா், முத்தழகன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் வாழப்பாடி கணேசன், பேளூா் மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
வெள்ளிக்கிழமையும் வாழப்பாடி வருவாய் வட்டத்தில், அரசு அலுவலங்கள், பள்ளிகள், மருத்துவமனை, பொது விநியோகக் கடைகளில் ஆய்வுப் பணிகள் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.