மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு
மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 600கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,422 கனஅடியிலிருந்து 6,229 கனஅடியாகக் குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.
கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு விநாடிக்கு 500 கன அடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீா்மட்டம் 108. 97 அடியிலிருந்து 109.24 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 77.33 டி.எம்.சி.யாக உள்ளது.