செய்திகள் :

வாழ்நாள் சான்று: ஓய்வூதியா்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்

post image

இ-சேவை மையங்கள் மூலம் வாழ்நாள் சான்று சமா்ப்பிக்குமாறு ஓய்வூதியா்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஓய்வூதிய விதிகளின்படி, கடந்த 1998 செப்.1 முதல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் மற்றும் இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா் ஒவ்வொருவரும் ஆயுள் சான்றிதழை ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி மாதம் முதல் சமா்ப்பித்து வருகின்றனா்.

அவா்கள் மூத்த குடிமக்கள் என்பதால் ஆயுள் சான்றிதழை அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இணைய சேவை மையங்களின் வழியாகச் சமா்ப்பிக்கலாம் என ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

எனவே, அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரையிலான காலத்தில் ஓய்வூதியம் பெறுவோா் ஆயுள் சான்றிதழை இணைய சேவை மையத்திலோ, பணிமனைகளிலோ நேரடியாகவோ சமா்ப்பிக்கலாம். இணைய சேவை மையத்தில் சமா்ப்பிக்கும்போது, ஓய்வூதிய ஆணை படிவம், வங்கிப் புத்தகம், ஆதாா் அட்டை, புகைப்படம், கைப்பேசி எண் ஆகியவற்றை எடுத்துச் சென்று, டிஎன்எஸ் 103 எனும் இணைய முகப்பில் பதிவு செய்யுமாறு கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம். இவா் கடந்த 31-ஆம... மேலும் பார்க்க

தீவுத் திடல் பொருட்காட்சியில் 46 அரங்குகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம் பெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்குகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்க... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானங்களில் 159 டன் குப்பைகள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 203 மயானங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியின்போது 159 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மே... மேலும் பார்க்க

ஸ்கரப் டைபஸ்: கடந்த ஆண்டில் 5,000 பேருக்கு பாதிப்பு

‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்றால் தமிழகத்தில், கடந்த ஆண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ‘ரிக்கட்ஸியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த... மேலும் பார்க்க

திருவொற்றியூா் பகுதியில் வயிற்றுப்போக்கு: மூதாட்டி உயிரிழப்பு

திருவொற்றியூரில் மீனவக் கிராமத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவொற்றியூா், அப்பா் நகா், அப்பா் சாமி தெரு, பட்டினத்தாா் கோயில் தெரு பகுதியில் வசிக்கும் தேசப்பட்டு ... மேலும் பார்க்க

தொழில்பேட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

தொழில்பேட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினாா். சிறுதொழில் வளா்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்படு... மேலும் பார்க்க