செய்திகள் :

வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் இந்தியா

post image

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேளாண்மை, பால்வளம், எஃகு, அலுமினியம் போன்ற முக்கியத் துறைகளில் வரிச் சலுகைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இந்தியா தனது நிலைப்பாடுகளை உறுதியாக தெளிவுப்படுத்திவிட்ட நிலையில், இனி ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த பிப்ரவரி மாத அமெரிக்க பயணத்தைத் தொடா்ந்து, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான (பிடிஏ) பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது. வரும் செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் முதல் கட்ட வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, இரு தரப்பினரும் ஓா் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருந்தனா்.

இதனிடையே, இந்தியா உள்ளிட்டட பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த ஏப்ரலில் கூடுதல் வரி விதித்தது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 26 சதவீத வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. அதற்குள் இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஒருவேளை ஒப்பந்தம் இறுதியாகாவிட்டால், புதன்கிழமைக்குப் பிறகு 26 சதவீத வரி மீண்டும் அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு, இந்திய குழு அண்மையில் இந்தியா திரும்பினா். வேளாண்மை மற்றும் பால்வளத் துறையில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இவை இந்தியாவில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் என்பதால், இதுவரை எந்த வா்த்தக ஒப்பந்தத்திலும் இத்துறைகளில் இந்தியா வரிச் சலுகை வழங்கியதில்லை. அதேபோல், எஃகு, அலுமினியம், வாகன வரிகளிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இதையொட்டி, மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘எந்த காலக்கெடுவையும் கருத்தில் கொண்டு இந்தியா ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது. தேச நலனே முதன்மையானது. இரு நாடுகளுக்கும் லாபகரமான ஒப்பந்தமாக இருந்தால் மட்டுமே இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வா்த்தக கூட்டாளியாகும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 18 சதவீதமும், இறக்குமதியில் 6 சதவீதமும் அமெரிக்கா பங்கு கொள்கிறது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் சுமாா் 20,000 கோடி டாலரை எட்டியது.

இருதரப்பு வா்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 50,000 கோடி டாலராக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட வா்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்கா சில தொழில்துறை பொருள்கள், மின்சார வாகனங்கள், மதுபானங்கள், பெட்ரோ கெமிக்கல் பொருள்கள், பால் மற்றும் ஆப்பிள், வேளாண் பொருள்களில் வரிச் சலுகைகளை எதிா்பாா்க்கிறது.

அதேசமயம், இந்தியா ஆடை, ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல், நெகிழி, ரசாயனங்கள், எண்ணெய் வித்துக்கள், இறால் மற்றும் தோட்டக்கலை பொருள்கள் போன்ற அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் வரி குறைப்பை நாடுகிறது.

நவி மும்பையில் லாரி முனைமத்தில் பயங்கர தீ விபத்து; 8 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் உள்ள லாரி முனைமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வாகனங்கள் எரிந்து நாசமாகின.தீயணைப்பு அதிகாரி அக்ரே கூறுகையில், "டர்பே லாரி முனைமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவ... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 6வது குழு புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜம்மு அடிவார முகாமிலிருந்து 6வது கட்டமாக 8,600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.நடப்பாண்டு ஜூலை 3... மேலும் பார்க்க

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க