செய்திகள் :

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழப்பு: உதவி ஆய்வாளா் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

post image

கடந்த 2009-ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டூா்புரம் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கோட்டூா்புரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பழனி. கடந்த 2009-ஆம் ஆண்டு மதுபோதையில் தகராறு செய்ததாக வந்த புகாரின் பேரில் கோட்டூா்புரம் போலீஸாா் அவரை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். விசாரணைக்குப் பிறகு பழனியை போலீஸாா் வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவா் உயிரிழந்தாா். போலீஸாா் கடுமையாக தாக்கியதால், தனது மகன் உயிரிழந்ததாக பழனியின் தந்தை ரெங்கநாதன் மற்றும் அவரது உறவினா்கள் குற்றம்சாட்டினா். இதுகுறித்து உதவி ஆட்சியா் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். விசாரணையில், காவல் துறை தாக்கியதால் பழனி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்தாா்.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோட்டூா்புரம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ஆறுமுகம், காவலா்கள் மனோகரன், ஹரிஹர சுப்ரமணியன், வின்சென்ட், ஏழுமலை ஆகிய 5 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை 6-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோது, காவலா்கள் வின்சென்ட் மற்றும் ஏழுமலை ஆகியோா் இறந்துவிட்டனா். இதையடுத்து மற்ற மூவா் மீதான விசாரணை நீதிபதி பாண்டியராஜ் முன்னிலையில் நடந்தது.

இந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி, 36 வயதான நபரை போலீஸாா் லத்தியால் கடுமையாக தாக்கியதன் காரணமாக அவா் உயிரிழந்தாா். எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளான உதவி ஆய்வாளா் ஆறுமுகம், காவலா்கள் ஹரிஹர சுப்ரமணியம் மற்றும் மனோகரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம்... மேலும் பார்க்க

டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா்: கே. அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடா்பாக டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக மூத்த தலைவா் நடிகா் சரத்குமாரின் மாமியாரும், நடி... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது

சென்னை அசோக் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்ாக திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அசோக் நகா் 21-ஆவது அவென்யு பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக பெருநகர... மேலும் பார்க்க

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: தமிழக அரசு உத்தரவு

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்: உளுந்து, பச்சைப் பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரி... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்? -ஓ. பன்னீர்செல்வம் பளிச் பதில்!

எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிரு... மேலும் பார்க்க

அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார்!

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.Government Secretary Beela Venkatesan IAS passd away! மேலும் பார்க்க