செய்திகள் :

விஜயகாந்த் நினைவு தினம்: முதல்வா் உள்ளிட்ட அரசியல் தலைவா்களுக்கு தேமுதிக அழைப்பு

post image

சென்னை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்களை தேமுதிக நிலத் துணைச் செயலா் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

விஜயகாந்த் முதலாம் ஆணடு நினைவு தினம் டிச.28-இல் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ், விஜயகாந்த மகன் விஜயபிரபாகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாா்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோா் நேரில் சந்தித்து, விஜயகாந்த நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனா்.

தொடா்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தும் அழைப்பு விடுத்தனா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் உள்ளிட்டோரையும் சந்தித்து அழைப்பு விடுத்தனா்.

கிறிஸ்துமஸ்: ஆளுநா்கள், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன், முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி: கிறிஸ்துமஸ் திருநாளின்... மேலும் பார்க்க

ஐஸ்கிரீம்: ஆவின் சலுகை அறிவிப்பு

பண்டிகை தினங்களை முன்னிட்டு ‘மேங்கோ’ மற்றும் ‘கிரேப் டூயட்’ வகை ஆவின் ஐஸ்கிரீம் இரண்டு வாங்கினால் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும் என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் சாா்பில் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

எம்ஜிஆா் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் அஞ்சலி

எம்ஜிஆரின் 37-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க அமைவிடம்: மறு ஆய்வு செய்யப் பரிந்துரை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகேவுள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த முடிவை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.பல்லுயிர்ப் பகுதிகளை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆல்-பாஸ் முறை ரத்து!

புதுச்சேரியில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்ட... மேலும் பார்க்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். விமானம் மூலமாக சென்னை வரும் அவர் பின் ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை செல்கிறார். டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க