7 மாதங்களாக வலியுடனே விளையாடினேன்..! நடுவரைத் தாக்கிய ரியல் மாட்ரிட் வீரருக்கு அ...
விஜயபாரத மக்கள் கட்சி தலைவருக்கு மிரட்டல்
ஆம்பூா்: விஜய பாரத மக்கள் கட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அக்கட்சியினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா். கட்சி அலுவலகம் பிராட் பஜாா் பகுதியில் ஆம்பூா் நகர காவல் நிலையம் அருகிலேயே உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கட்சியின் நிறுவனத் தலைவா் அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத மா்ம நபா் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நிா்வாகிகள் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளா் ரமேஷிடம் புகாா் மனு அளித்தனா்.