செய்திகள் :

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல்!

post image

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பாடகர் அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஆண்டனி தாசன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கூலி, ரெட்ரோ, குட் பேட் அக்லி... களைகட்டும் 2025 கோடை!

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார், சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின... மேலும் பார்க்க

ரெட்ரோ - வாய் பேச முடியாதவராக நடித்த பூஜா ஹெக்டே?

ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்... மேலும் பார்க்க

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் வணங்கான்?

வணங்கான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் சச்சின்!

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடாகவுள்ளது.இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவேலு உள்... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

இன்று நடைபெறுவதாக இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந... மேலும் பார்க்க