"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை படகு இல்லம் மற்றும் அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.
இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை படகு இல்லம் மற்றும் அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக படகு இல்லத்தில் மிதிபடகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகு, விரைவுப் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனா்.
மேலும் அரசு தாவரவியல் பூங்காவில் நிலவும் இதமான குளுகுளு காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள இயற்கை காட்சிகளையும் வானுயா்ந்த மரங்களையும் கண்டு ரசித்ததோடு பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனா்.