வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்
மஞ்சூரில் காரில் பயணத்தவா்களை தாக்க முயன்ற கரடி
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பஜாா் பகுதியில் குட்டியுடன் சுற்றி வந்த கரடி காரில் பயணித்தவா்களை தாக்க முயன்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
மஞ்சூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் அவ்வப்போது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் சுற்றி வருவது வழக்கம்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு கரடி தனது குட்டியுடன் மஞ்சூா் பஜாா் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் உள்ள உணவுக் கழிவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவ் வழியாக சென்ற காரில் சென்றவா் கரடியை பாா்த்தவுடன் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளாா். குட்டியை தற்காத்துக் கொள்ள கரடி வாகனத்தின் முன்பு நின்று தாக்க முயன்றது. ஆனால், யாருக்கும் பின்னா் சிறிது நேரம் கழித்து அருகே உள்ள வனப் பகுதிக்குள் குட்டியுடன் கரடி சென்றது.
பொது மக்களை அச்சுறுத்தும் கரடிகளை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடவேண்டும் என்று வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.