செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை!

post image

பிரபல வணிக வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாகவுள்ள 124 மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Senior Customer Service Executive) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்று(மார்ச் 16) க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: Senior Customer Service Executive

காலியிடங்கள்: 124

தகுதி: குறைந்து 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 32,000

வயது வரம்பு: 31.01.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.

தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும்.

ராணுவத்தில் வேலை வேண்டுமா? - உடனே இணையவழியில் விண்ணப்பிக்கவும்!

தேர்வு நடைபெறும் சரியான தேதி, இடம் குறித்த விபரங்கள் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். அழைப்பு கடிதத்தை வங்கி www.tmbnet.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ 1,000 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tmbnet.in/tmb esirp என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 16.03.2025

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP.pdfஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 7,783 பணி: அங... மேலும் பார்க்க

உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!

உதவித் தொகையுடன் சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் அளிக்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஏப்.2-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம... மேலும் பார்க்க

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் (எய்ம்ஸ்) காலியாகவுள்ள செவிலியர் அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண். 34/2025பணி: Nursing Officerதகுதி: செ... மேலும் பார்க்க

விவசாய பட்டதாரிகளுக்கு ஜேஆர்எப் பணி

நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Research Fellowகாலியிடம்: 1தகுதி: Agricultura... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உயிரி-பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப... மேலும் பார்க்க

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பிலானி, 1953 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நிறுவப்பட்ட மின்னணு துறையில் ஒரு முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். இது மின்னண... மேலும் பார்க்க