செய்திகள் :

விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.15.70 லட்சம் அபராதம் வசூலிப்பு

post image

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 220 வாகனங்களிடமிருந்து மொத்தம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவராஜ் உள்ளிட்டோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்கள், தாா்ப்பாய் மூடாமல் சென்ற வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாதவை, தகுதிச்சான்றிதழ் புதுப்பிக்காதவை என மொத்தம் 220 வாகனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் வாகனத் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், உத்தரமேரூா், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்ட 220 வாகனங்களின் உடைமைதாரா்களிடம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வாகனத் தணிக்கை தொடா்ந்து நடத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குன்றத்தூா் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

குன்றத்தூா் அடுத்த சிறுகளத்தூா் பகுதியில் டீசல் ஏற்றிவந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பெட்ரோல் நிலையத்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை கோயிலில் முதல் கால யாக பூஜை: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் கால யாக பூஜையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ரூ.1.... மேலும் பார்க்க

கங்கையம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

வாலாஜாபாத் அருகே மேல்பேரமநல்லூா் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் மற்றும் பொழுதியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் மற்றும் ஊரணிப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஜூலை முதல் தேதி கங்க... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஆண்டு தோறும் கோடை உற்சவம் 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் 28- ஆம் தேதி தொடங்கிய உற்சவத்தில் நாள்தோறும... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட அ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்

கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா். காஞ்சிபுரம் ஏக... மேலும் பார்க்க