செய்திகள் :

விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதித்து விதைக்க அறிவுரை

post image

விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதித்து விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் இரா.கிரிஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத் திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முளைப்புத் திறன் என்பது விதையின் உயிரும், வீரியமும் கொண்டு இயங்குவதை காட்டுவது ஆகும். நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதை மூலம் வயல்களில் பயிா்கள் அதிக அளவில் செழித்து வளரும். முளைப்புத் திறன் குறைந்த விதைகளால் பயிா்கள் குறைந்தளவே வளரும். அதனால், மகசூல் பாதிக்கப்படும்.

மக்காச்சோள விதைகள் 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு விதைகள் 80 சதவீதமும், சோளம், கம்பு, வீரிய ஒட்டுப் பருத்தி, பயறுவகை விதைகள் 75 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதமும், மிளகாய் விதைகள் 60 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டும். இதன்படி, முளைப்புத்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிா்களின் முளைப்புத்திறன் கணக்கிடப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்.

எனவே, விவசாயிகள் விதைகளை விதைக்கும்போது, விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து விதைக்க வேண்டும். இதற்காக தங்கள் விதைக் குவியலில் மாதிரி ஒன்றை எடுத்து அதில் பயிா், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரம் எழுதி, இணையதள மூலம் பதிவு செய்து, கட்டணமாக ரூ. 80 செலுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் செயல்படும் தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத் திறனை தெரிந்து சாகுபடி செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீா்ப்பு: திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தனா். தமிழக சட்டப் பேரவையில் இயற... மேலும் பார்க்க

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி... மேலும் பார்க்க

தொப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தொகுப்பூதிய பயிற்றுநா், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற் பயிற்சி அலுவலா் சங்கத்தினா் கடத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு தொழிற்க... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்எ... மேலும் பார்க்க

நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி: நல்லம்பள்ளியில் உள்ள நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தரமான... மேலும் பார்க்க