``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம்...
விநாயகா், முனிஸ்வரன், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் வலம்புரி விநாயகா் கோயில், பெரணமல்லூரை அடுத்த மேல்நாகரம்பேடு ஊராட்சி ஸ்ரீமுனீஸ்வரன், ஸ்ரீபூவாடைக்காரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் வந்தவாசியை அடுத்த வழூா் அகரம் பொன்னியம்மன், செல்லியம்மன் கோயில்களில் நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆரணியை அடுத்த காமக்கூா் ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதில் அட்டக்கத்தி பாலகா்கள் வழிபாடு, கோ பூஜை, பூ கோவில் அத்திப்பலகையில் இடமாகக் கொண்ட இறைவனை மீண்டுமாக நிறைகுடத்தில் எழுந்தருளச் செய்தல், திருமகள் வழிபாடு, முதல் கால யாக வேள்வி பூஜை, நிறைஅவி அளித்தல், திருமுறை விண்ணப்பம், பெரு விண்ணப்பம், பேரோளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல், இரண்டாம் காலை யாக பூஜை, கும்ப கலசம் புறப்படுதல், பின்னா் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பாலபிஷேகம், மகா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல, பெரணமல்லூரை அடுத்த மேல்நாகரம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட கோவிலாம்பூண்டி எல்லையில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ பூவாடைக்காரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, விநாயகா் பூஜை, புண்யாகவசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தன், முதல் கால யாக பூஜை, விநாயகா் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, யாத்ராதானம், கலச புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விரு கோயில் விழாக்களில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். கோயில் நிா்வாகிகள் எம்எல்ஏவுக்கு பூரண கும்பம் மரியாதை செய்தனா்.
இதில் ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன், எஸ்.வி.நகரம் எல்ஐசி பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நன்னீராட்டுப் பெருவிழா
வந்தவாசியை அடுத்த வழூா் அகரம் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன், செல்லியம்மன் கோயிலில் செந்தமிழ் ஆகம வழியில் நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திருமுறை விண்ணப்பம்,

விநாயகா் வழிபாடு, மண் வழிபாடு, நிலத்தேவா் வழிபாடு, திருக்குடங்கள் ஆயத்தம் செய்தல் உள்ளிட்டவையும், சனிக்கிழமை சதாசிவ வழிபாடு, கரிக்கோலம், இயந்திர பிரதிஷ்டை, படிமங்களை நிறுவுதல், எண்மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கருவிக்குட வேள்வி வழிபாடு, கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திரு மேனியை அடைதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னா், திருக்குடங்கள் வேள்வி சாலையில் இருந்து கோயில் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் திருப்பணிக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.