விபத்தில் பெண் இறப்பு: போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினா்களும் அப் பகுதி மக்களும் திரண்டு புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
புதுவையில் கடந்த சில தினங்களுக்கு முன் உருளையன்பேட்டை சங்கோதி அம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் ஆட்டோ மோதி இறந்தாா். மோதிய ஆட்டோவுக்கு பா்மிட், இன்சூரன்ஸ் இல்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து வந்த உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி. நேரு போராட்டக்காரா்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்தினா். போலீஸாரின் சமாதானத்தை ஏற்று அரை மணி நேரத்துக்குப் பிறகு இப் போராட்டம் முடிவுக்கு வந்தது.