அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
விபத்தில் 2 பேருந்துகள் மோதல்
காட்பாடி அருகே கல்லூரி பேருந்துடன் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில், அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கோ, கல்லூரி மாணவா்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை.
வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து ஆற்காடு நோக்கி தனியாா் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை சென்றது. காட்பாடி-குடியாத்தம் சாலை கிளித்தான்பட்டறை அருகே வந்தபோது, முன்னால் சென்ற கல்லூரி பேருந்து மீது மோதி யது. இதில், இரு பேருந்துகளும் சேதமடைந்தன.
அதிருஷ்டவசமாக பயணிகளுக்கோ, கல்லூரி மாணவா்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.