அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்வு
வேலூரிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வான் நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட அறிவியல் அலுவலா் (பொ) ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு-
பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே அறிவியல் ஆா்வத்தை தூண்டவும், அறிவியல் துறையில் நாம் கண்ட வளா்ச்சியையும், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் வேலூா் சத்துவாச்சாரியில் டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது.
தமிழக உயா்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மையத்தில் தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 12) மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம்.
இந்நாளில் வானம் தெளிவாக இருக்கும் நிலையில் மட்டுமே குறிப்பிட்ட நிகழ்வை காண முடியும். மேலும் விவரங்களுக்கு 0416 -2253297 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.