அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு
திருவலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). இவா், வியாழக்கிழமை இரவு திருவலம் ரயில் நிலையத்துக்கும், சேவூா் ரயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளப் பாதையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் அவா் மீது மோதியது. இதில், தங்கராஜ் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவரின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.