விபத்துகளால் 38% இளைஞர்கள் பலி!
இந்தியாவில் சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
புள்ளிவிவரங்களின்படி, விபத்துகளினால் உயிரிழப்பவர்களில் 38 சதவிகிதம் பேர் இளைஞர்களாகவே உள்ளனர். அவர்களில் 15 முதல் 29 வயதுடையோர் பெரும்பாலானோர் தடுக்கக் கூடிய விபத்துகளிலேயே உயிரிழக்கின்றனர்.
சாலை விபத்துகளினால் 26 சதவிகிதம் பேரும், பிற விபத்துகளினால் 12 சதவிகித இளைஞர்களும் பலியாகின்றனர். அதுமட்டுமின்றி, 16 சதவிகித இளைஞர்கள் தற்கொலையால் பலியாகின்றனர்.
மேலும், இதய, ரத்தக்குழாய்கள் பாதிப்பால் 9 சதவிகிதமும், செரிமான நோய்களால் 7 சதவிகித இளைஞர்களும் உயிரிழக்கின்றனர்.
இதையும் படிக்க:ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓ(ட்)டிய கார்! 2 பேர் பலி! - என்ன நடந்தது?