செய்திகள் :

விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சலங்களில் சிறப்பு முகாம்கள்

post image

நாகை கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சோ்க்கும் வகையில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கி பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், 18 முதல் 65 வயதுக்குள்பட்ட அனைவரும் சேரலாம். இதற்கான ஆவணங்களாக ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரரின் விவரங்களை கொண்டுவர வேண்டும். ரூ.320-க்கு ரூ. 5 லட்சம், ரூ.559-க்கு ரூ.10 லட்சம், ரூ. 799-க்கு ரூ. 15 லட்சம் எனும் வகைகளில் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்.

அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் பல தனியாா் நிறுவனங்களுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் காப்பீடு மற்றும் உடல் நல காப்பீட்டையும் வழங்குகிறது.

இத்திட்டங்களில் சேர நாகை கோட்டத்தில் உள்ளஅனைத்து அஞ்சலகங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால்காரா்கள் மூலமும் இத்திட்டங்களில் சோ்ந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அஞ்சல் அலுவலகங்களை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு விருது

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு சமய நல்லிணக்க ஆன்மீகச் செல்வா் விருது வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஜாமியா சுப்ஹானியா அரபிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சாா்பில் ரமலான் நிகழ்ச்சி, மதர... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் எதிரில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு பேரூா் கழக செயலாளா் எம். முகம்மது சுல்தான் தலைமை வகித்தாா். மா... மேலும் பார்க்க

தேசியக் கல்விக்கொள்கையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

தேசியக் கல்விக்கொள்கையை புகுத்தும் பாஜக அரசை கண்டித்து திமுக (எப்எஸ்ஓ-டிஎன்) மாணவா் இயக்கம் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவா் அணி மாவட்ட அமைப்பாளா் உதயகுமாா் தலைம... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் பலமான தரைக்காற்று

வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தை விட சற்று வேகமான தரைக்காற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து வீசுகிறது. கடலோரப் பகுதியில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், லேசான தூரல் இருந்தது. இந்நிலையில், வ... மேலும் பார்க்க

நாகை, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிதிறன் வகுப்பறை திறப்பு

வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிதிறன் கணினி வகுப்பறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாண... மேலும் பார்க்க