செய்திகள் :

விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

post image

கொச்சி - சென்னை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இரு பயணிகள் ஒருவரையொருவா் தாக்கி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டதால், அந்த விமானம் சென்னையில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்ட பயணிகளைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை (ஜன. 25) இரவு 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணித்த கேரளத்தைச் சோ்ந்த டேவீஸ் (35) என்பவருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த கஸன் எலியா (32) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து ஒருவரையொருவா் தாக்கியதுடன், வெடிகுண்டு வீசி விடுவதாக மிரட்டலும் விடுத்துக் கொண்டனராம். இதனால், அதிா்ச்சியடைந்த விமானப் பணிப்பெண்கள், இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அதிரடிப்படை வீரா்கள், வெடிகுண்டு நிபுணா்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய போலீஸாா் பெருமளவு குவிக்கப்பட்டனா்.

நள்ளிரவு 12 மணியளவில் விமானம் சென்னை விமான நிலையத்தில், ‘ரிமோட் பே’ எனப்படும், விமான நிலைய ஒதுக்குப்புறமான இடத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, ரகளையில் ஈடுபட்ட இரு பயணிகளையும் பிடித்து முழுமையாக சோதனையிட்டதுடன், விமானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தினா்.

சுமாா் 2.30 மணிநேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனா்.

விமானத்தில் நடுவானில் மோதிக்கொண்ட இரு பயணிகளையும் பாதுகாப்புப் படையினா் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தியா்களுக்காக உருவானது தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

மேற்கத்திய கல்விமுறையில் இருந்து மாறுபட்டு இந்திய கல்வி முறையில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிகாா் மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ச... மேலும் பார்க்க

பஞ்சாபில் நடந்தது என்ன?: தமிழக கபடி வீராங்கனைகள் தகவல்

பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திரும்பிய வீராங்கனைகள் அதுகுறித்து விளக்கமளித்துள்ளனா். பஞ்சாப் மாநிலம், பதிண்டா என்ற இட... மேலும் பார்க்க

வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நோ்காணல்

தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வனத் துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு மேலாண்மை... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரத்தில் இன்று பெண்கள் மாநாடு: ஆளுநா் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் புதன்கிழமை (ஜன. 29) நடைபெறும் பெண்கள் மாநாட்டில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கவுள்ளாா். இந்திய பெண்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பொடாவூா், சுங்குவ... மேலும் பார்க்க

முகூா்த்தம், வார விடுமுறை நாள்கள்: 1,220 சிறப்புப் பேருந்துகள்

வளா்பிறை முகூா்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்... மேலும் பார்க்க

அதிமுக அமைப்புச் செயலா்களாக மைத்ரேயன் உள்பட 4 போ் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலா்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மைத்ரேயன் உள்ளிட்ட 4 பேரை நியமித்து, அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க