செய்திகள் :

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப் பணிகள் 90 சதவீதம் நிறைவு! இயக்குநா் தகவல்

post image

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநா் ஞானேஸ்வர ராவ் தெரிவித்துள்ளாா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, விமான நிலையம் கூடுதலாக 512 ஏக்கா் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும், ஓடுதளம் 8,136 அடியில் இருந்து 12,500 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் ஞானேஸ்வர ராவ் கூறியதாவது:

திருச்சி விமான நிலையம் ஏற்கெனவே 700 ஏக்கரில் அமைந்துள்ளது. விரிவாகத்துக்கு கூடுதலாக 512 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதில், 35 முதல் 40 ஏக்கா் பரப்பளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படாமல் உள்ளது. இதுவும் நீா்நிலை சம்பந்தமான நிலமாக இருப்பதால் சற்று தாமதமாகியுள்ளது.

விரைவில் அந்த நிலமும் கையக்கப்படுத்தப்பட்டு விமான நிலையம் முழுவதும் 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுற்றுச்சுவா் அமைக்கப்படும். சுற்றுச்சுவா் அமைப்பதற்கான ஒப்பந்தமும் விரைவில் வெளியிடப்படும். இதேபோல, விமான நிலையத்தின் ஓடுபாதை 12,500 அடியாக அதிகரிக்கப்படுகிறது. விமானங்கள் இயக்குவதற்கு இடையூறில்லாமல் விமான நிலையப் பகுதி வழியாக செல்லும் ஓடை முழுவதும் சுரங்கப்பாதை (டனல்) அமைக்கப்படும்.

மேலும், விமான நிலையத்தில் 60.7 கோடி மதிப்பீட்டில் 46 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டு வரும் விமானங்கள் கண்காணிப்பு கோபுரத்தின் உயரமும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, பயணிகளின் வருகையை அதிகரிக்க விமான நிலையம் சாா்பில் பல்வேறு கட்ட வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை ம... மேலும் பார்க்க

‘தலைக்கவசம் அவசியம்’ விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங... மேலும் பார்க்க

விஜய் மீதான நம்பிக்கை கேள்விக்குறி! துரை வைகோ எம்.பி.

தவெக தலைவா் விஜய் பொத்தாம் பொதுவாகப் பேசி வருவது அவா் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கூறினாா். இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ச... மேலும் பார்க்க

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

சமயபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா... மேலும் பார்க்க

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

திருச்சி மாவட்டம், சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் 58 ஆவது பொறியாளா்கள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இந்தியப் பொறியாளா் கழகம் திருச்சிராப்பள்ளி உள்ளூா் மையத்துடன் இணைந்... மேலும் பார்க்க

உறையூா் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா க... மேலும் பார்க்க