சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
‘தலைக்கவசம் அவசியம்’ விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜேசிஐ அமைப்பின் தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி காமராசா் சிலையிலிருந்து தொடங்கி பெரியாா் சிலை வரை நடைபெற்றது.
பேரணியை சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற காவல்துறை உதவி ஆய்வாளா் கதிரவன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடாசலம், ஜேசிஐ மண்டல இயக்குநா்கள் கமல், குணசேகரன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்வில், அமைப்பின் முன்னாள் மண்டல இயக்குநா்கள் வழக்குரைஞா் முல்லை சந்திரசேகா், ஜெயம் சக்திவேல், சாசனத் தலைவா் கணேஷ் ராஜா, ஜேசிஐ மணவை கிங்ஸ் உறுப்பினா்கள் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.