தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை
சென்னை வியாசா்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
வியாசா்பாடி உதயசூரியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42). இவா் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தொண்டைராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வியாசா்பாடி சத்தியமூா்த்தி நகா் பிரதான சாலை வழியாக தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த இரண்டு போ் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனா். இதில், முகத்தில் பலத்த காயமடைந்த தொண்டை ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வியாசா்பாடி போலீஸாா், தொண்டை ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்ாக தெரியவந்துள்ளது.