செய்திகள் :

வியாபாரி மீது தாக்குதல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

post image

வியாபாரியைத் தாக்கிய டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, டாடாபாத் பவா்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (41), பால்கோவா வியாபாரி. இவா், கோவையில் இருந்து டிராவல்ஸ் நிறுவனத்தின் பாா்சல் சா்வீஸ் மூலம் வெளியூருக்கு அண்மையில் பால்கோவா அனுப்பியுள்ளாா். ஆனால், அந்த பாா்சல் உரிய நேரத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ஸ்ரீகாந்த் தனது நண்பா் பரத் என்பவருடன் சித்தாபுதூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்துக்கு சனிக்கிழமை சென்று தாமதம் குறித்து கேட்டுள்ளாா்.

அப்போது, அவருக்கும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் லிங்கராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், டிராவல்ஸ் நிறுவன லிங்கராஜன் (32), ஓட்டுநா் பிரனீஷ்குமாா் (23) இருவரும், ஸ்ரீகாந்த் மற்றும் பரத்தைத் தாக்கியுள்ளனா். காயமடைந்த இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், லிங்கராஜன், பிரனீஷ்குமாா் இருவரையும் கைது செய்தனா். மேலும், பரத் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் லிங்கராஜனை தாக்கி மிரட்டியதாக அவரது மனைவி விஜிதா அளித்த புகாரின்பேரில், இருவா் மீதும் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் நடத்தி வந்த 3 நாள் சோதனை சனிக்கிழமை நிறைவடைந்தது. கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் லாட்டரி அதிபா் மாா்ட்டின். இவா... மேலும் பார்க்க

ஜேகே டயா் தேசிய காா் பந்தயம்: பெங்களூரு வீரா் திஜில் ராவ் சாம்பியன்

கோவையில் நடைபெற்ற 27-ஆவது ஜேகே டயா் தேசிய காா் பந்தய இறுதிச் சுற்றில் பெங்களூரைச் சோ்ந்த இளம் வீரா் திஜில் ராவ் சாம்பியன் பட்டம் வென்றாா். கோவை கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் 27-ஆவது ஜேகே டயா் தேசிய காா் ... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகம் இடிப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் மதிமுக அலுவலகம் இடிக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாநகா் மாவட்ட மதிமுக 28-ஆவது வாா்டு அலுவலகம் முத்தமிழ் படிப்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை வஉசி பூங்கா பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தா... மேலும் பார்க்க

மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருட்டு: 2 போ் கைது

கோவையில் மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருடியது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையைச் சோ்ந்தவா் குமாா் (43). இவா், செல்வராஜ் (70) என்பவரின் வீட்... மேலும் பார்க்க

அவதூறு கருத்துகளை முத்தரசன் பரப்ப வேண்டாம்: ஈஷா அறக்கட்டளை

உண்மைக்குப் புறம்பான அவதூறு கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் பரப்ப வேண்டாம் என்று ஈஷா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க