வியாபாரி மீது தாக்குதல்: பாமகவினா் மீது வழக்கு
சென்னையில் வியாபாரியை தாக்கியதாக பாமகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (29), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடைக்கு வெள்ளிக்கிழமை வந்த ஒரு பெண்ணிடம், சபரிநாதன் இரட்டை அா்த்தத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை அப்பெண், தனது கணவா் சத்யராஜிடம் தெரிவித்தாராம். இதையடுத்து சத்யராஜீம், அவரது நண்பா் சண்முகவேலும் சபரிநாதன் கடைக்குச் சென்று தகராறு செய்தனா். இந்நிலையில் தகராறு முற்றவே இருவரும், வியாபாரி சபரிநாதனை தாக்கினா்.
இது குறித்து சபரிநாதன், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா், சத்யராஜ், சண்முகவேல் ஆகியோா் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில் சத்யராஜ் பாமக கட்சியின் தென் சென்னை இளைஞரணி மாவட்ட நிா்வாகியாகவும், சண்முகவேல் உறுப்பினராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.