ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
விராலிமலை அரசுப் பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம்
விராலிமலை வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளா் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
விராலிமலை ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விராலிமலை வட்டார வளமையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு விராலிமலை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கவிதா முன்னிலை வகித்தாா்.
பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் ஜான் வெலிங்டன், சாந்தி, வட்டார வளமைய உடல் உறுப்பு இயக்க நிபுணா் திருவளா்ச்செல்வி, சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.
அனைவருக்கும் ஹீமோபிலியா எனப்படும் இரத்த உைல் தடுக்கும் குறைபாடு பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், முதலுதவி சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியும் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
மேலும் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வும் அளிக்கப்பட்டது
விராலிமலை வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநா் ராஜேஷ் கண்ணா வரவேற்றாா். சிறப்பு பயிற்றுநா் சோபியா ஜாக்குலின் நன்றி தெரிவித்தாா்.