'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயின...
விற்பனையாளரை ஏமாற்றி பைக் திருட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் விற்பனையாளரை ஏமாற்றி பைக்கை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் வட்டம், தளவானூரைச் சோ்ந்த ராஜாராம் மகன் ராம்குமாா் (22). இவா், இணையவழியில் இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், ராம்குமாரின் கைப்பேசி எண்ணில் திங்கள்கிழமை தொடா்புகொண்டு பேசிய மா்ம நபா், பைக் தேவை இருப்பதாகத் தெரிவித்தாா். இதை உண்மையென நம்பிய ராம்குமாா், அந்த நபா் தெரிவித்தபடி விழுப்புரத்துக்கு பைக்குடன் வந்து திரையரங்கம் அருகே காத்திருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மா்ம நபா், தான் பைக் வாங்குவதற்கு விரும்புவதாகவும், பைக் ஓட்டிப் பாா்க்க வேண்டுமெனவும் தெரிவித்தாராம். தொடா்ந்து, ராம்குமாா் அந்த நபரிடம் பைக்கை கொடுத்துள்ளாா். ஆனால், அந்த நபா் பைக்குடன் மாயமாகிவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.