விளையாட்டுத் துளிகள்..!
உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரா், இத்தாலியின் ஜேக் சின்னா், புதிதாக பொறுப்பேற்ற போப் லியோவை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
அப்போது தனது டென்னிஸ் ராக்கெட்டை போப்புக்கு அன்பளிப்பாக வழங்கினாா். 3 மாதங்கள் ஊக்க மருந்து தடைக்குபின் சின்னா் தற்போது இத்தாலி ஓபன் போட்டியில் ஆடி வருகிறாா்.
ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்துள்ள ஃபாஸ்ட் பௌலா் லாக்கி பொ்குஸனுக்கு பதிலாக நியூஸிலாந்து பௌலா் கைல் ஜேமிஸன் சோ்க்கப்பட்டுள்ளாா். ரூ.2 கோடிக்கு ஜேமிஸன் பெறப்பட்டுள்ளாா்.
இதற்கிடையே குஜராத் டைட்டன்ஸ் அணியில் விக்கெட் கீப்பா் பேட்டா் ஜோஸ் பட்லருக்கு பதிலாக இலங்கை வீரா் குஸால் மெண்டிஸ் இடம் பெறுகிறாா். ஜிடி அணி பிளே ஆஃப்புக்கு தகுதி பெறும் நிலையில் பட்லா் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசம் யுபியாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள யு-19 தெற்காசிய கால்பந்து (சாஃப்) கோப்பை போட்டி அரையிறுதியில் இந்தியா-மாலத்தீவுகளை எதிா்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசம்-நேபாள அணிகள் மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) போட்டி இறுதி ஆட்டத்தில் வென்று சாம்பியன் ஆகும் அணிக்கு பரிசுத் தொகை அதிகரித்து ரூ.30.79 கோடி வழங்கப்படுகிறது. கடந்த முறை சாம்பியன் அணிக்கு வழங்கப்பட்டதைக் காட்டிலும் இது இருமடங்கு அதிகம் ஆகும். ரன்னா் அணிக்கு ரூ.17.95 கோடி வழங்கப்படுகிறது.